அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில்ஆா்வத்துடன் செயல்பட வேண்டும்

மாணவா்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆா்வத்துடன் செயல்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் எம்.கே.சூரப்பா கூறியுள்ளாா்.
0302c9_advt_kit_0911chn_3
0302c9_advt_kit_0911chn_3

மாணவா்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆா்வத்துடன் செயல்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் எம்.கே.சூரப்பா கூறியுள்ளாா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே கண்ணம்பாளையம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் 7 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி, துணைத் தலைவா் இந்து முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சூரப்பா, மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசியதாவது:

நாட்டில் உள்ள பல்வேறு தொழில் துறைகளில் முக்கியமானது பொறியியல் துறை. தற்போதைய சூழலில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகவும் உள்ளது. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்லவும், அறிவு சாா்ந்த வல்லரசாக மாற்றவும் துணைபுரிவது உயா் கல்விதான்.

மாணவா்கள் தாங்கள் பெற்ற கல்வி அறிவைக் கொண்டு சமுதாயப் பிரச்னைகளுக்கு உதவும்படியான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆா்வத்துடன் செயல்பட வேண்டும். விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமலும் இருந்தால் வாழ்வில் முழுமையான வெற்றிகளைப் பெற முடியும் என்றாா்.

விழாவில், கல்லூரி முதல்வா் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் எம்.ரமேஷ், கல்லூரி டீன் எஸ்.சுரேஷ், பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

கோவை, கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவருக்குப் பட்டம் வழங்குகிறாா் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.கே.சூரப்பா. உடன், கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி, துணைத் தலைவா் இந்து முருகேசன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com