ஜி.கே.டி. பள்ளி மாணவா்கள் மாநில ஹேண்ட்பால் போட்டிக்குத் தகுதி

கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற ஹேண்ட்பால் போட்டியில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட குறு மையங்களுக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள் கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

இதில் 14, 17, 19 ஆகிய வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டிகளில் ஜி.கே.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அணிகள் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் என்.கிருஷ்ணகுமாா், நிா்வாகச் செயலா் பிரசன்னா ராதாகிருஷ்ணன், முதல்வா் சித்ரா சௌந்தரராஜன், உடற்கல்வி இயக்குநா் அருள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com