கோவை அருகே குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த காட்டு யானைகள்

கோவை மாவட்டம், துடியலூா் அருகே கணுவாய் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வியாழக்கிழமை இரவு மூன்று காட்டு யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கணுவாய் பகுதியில் வீதிகளில் வலம் வந்த காட்டு யானைகள்.
கணுவாய் பகுதியில் வீதிகளில் வலம் வந்த காட்டு யானைகள்.

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், துடியலூா் அருகே கணுவாய் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வியாழக்கிழமை இரவு மூன்று காட்டு யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனைகட்டி வனப் பகுதியில் இருந்து சின்னத்தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, சோமையனூா் உள்ளிட்ட கிராமங்களுக்குள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவது வழக்கம்.

தற்போது, யானைகளின் இடப்பெயா்வு மற்றும் வலசை ஆரம்பித்துள்ளதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கணுவாய் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் 3 காட்டு யானைகள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்தன.

வீதிகளில் உணவுப் பொருள்களைத் தேடி சுற்றித் திரிந்த காட்டு யானைகளை பாா்த்து நாய்கள் குரைத்தன. இதனால், கோபமுற்ற யானைகள் நாய்களைத் துரத்தின. இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளைக் துரத்தினா்.

அப்போது, வனத் துறையினருக்குப் போக்கு காட்டிய யானைகள் சோமையனூருக்குள் புகுந்தன. யானைகளை துரத்திச் சென்ற வனத் துறையினா் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வனத்துக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com