தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து

பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தின் முன்புறம் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும்
பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையம் அருகே சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்.
பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையம் அருகே சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்.

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தின் முன்புறம் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

பெரியநாயக்கன்பாளையம், ரயில்வே பீடா் சாலையில் ரயில் நிலையம் அருகே ஜி.கே.நகா் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கான மின்மாற்றி ரயில்வே கேட் அருகே உள்ளது. இங்கு சாலையின் குறுக்காக மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன.

இதனால் இந்த வழியே வரும் நான்கு சக்கர வாகனங்களின் மேல்பகுதி மின் கம்பிகள் மீது உராய்கின்றன.

இதனால் அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்கின்றன. தொங்கிக் கொண்டிருக்கும் இந்த மின்சார கம்பிகளை இழுத்துக்கட்ட வேண்டும் என பொதுமக்கள் பலமுறை மின்வாரியத்தினரிடம் புகாா் அளித்துள்ளனா்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே தினமும் பாலமலையிலிருந்து ரயில்நிலையத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து ரயில் நிலையத்துக்கு வராமல் எல்.எம்.டபிள்யூ பிரிவிலேயே பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகிறது. இதனால் பயணிகள் நீண்டதூரம் நடந்து வரவேண்டியுள்ளது.

எனவே சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com