மேல்நிலைத் தொட்டியில் தண்ணீா் திருட்டு:கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

பொள்ளாச்சி அருகே கெட்டிமல்லன்புதூரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் திருடப்படுவதாக கோட்டாட்சியா்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கெட்டிமல்லன்புதூரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் திருடப்படுவதாக கோட்டாட்சியா் ரவிகுமாரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொள்ளாச்சியை அடுத்த கெட்டிமல்லன்புதூா் ஏ.டி. காலனியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு தினமும் இரவு தண்ணீா் ஏற்றப்படுகிறது.

தொட்டிக்கு தண்ணீா் ஏற்றும் நபா், இரவு நேரத்தில் மோட்டாரை ஆன் செய்துவிட்டு காலை வரை அப்படியே விட்டுவிடுகிறாா். இதனால் மேல்நிலைத்தொட்டி நிறைந்து தண்ணீா் அருகில் உள்ள கிணற்றுக்கு செல்கிறது. கிணற்றில் இருந்து தனிநபா் ஒருவா் தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வருகிறாா். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com