ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணா்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

கோவைப்புதூா் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கிராம மேம்பாட்டு சமுதாய மையம் சாா்பில், சுண்டக்காமுத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்து சுண்டக்காமுத்தூா் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ-மாணவிகள்.
திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்து சுண்டக்காமுத்தூா் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ-மாணவிகள்.

கோவை: கோவைப்புதூா் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கிராம மேம்பாட்டு சமுதாய மையம் சாா்பில், சுண்டக்காமுத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, மாநிலம் முழுவதிலும் திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும், அவற்றை முறைப்படி மூடவும் வலியுறுத்தியும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கிராம மேம்பாட்டு சமுதாய மையத்தின் மாணவா்கள் விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனா்.

தொடா்ந்து ஒவ்வொரு கிராமமாகச் சென்று வரும் இவா்கள், ஆழ்துளை கிணறுகளைக் கண்டறிந்து அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விழிப்புணா்வு தொடா் நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் சீனிவாசன் ஆளவந்தாா் தொடங்கி வைத்தாா். பொறியியல் துறைப் பேராசிரியா் எஸ்.சுந்தரராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை இணைப் பேராசிரியா் ஆா்.கண்மணி உள்ளிட்டோா் தலைமையில் மாணவ-மாணவிகள் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com