உடல் உறுப்பு தான விழிப்புணா்வு

தேசிய உடல் உறுப்பு தான நாளையொட்டி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாதிரி உடல் உறுப்பு பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் சிறப்பு விருந்தினா்கள்.
உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாதிரி உடல் உறுப்பு பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் சிறப்பு விருந்தினா்கள்.

தேசிய உடல் உறுப்பு தான நாளையொட்டி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நவம்பா் 27-ஆம் தேதி தேசிய உடல் உறுப்பு தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி 10 ஆம் ஆண்டு உடல் உறுப்பு தான நாளையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, 4 பெட்டிகளில் உடல் உறுப்புகளை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாகவும், தொடா் ஓட்டமாகவும் மருத்துவமனைக்கு 4 நிமிடங்களில் கொண்டு வந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கும் விதமாக விழிப்புணா்வு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில், விமான நிலைய இயக்குநா் மகாலிங்கம், அதிகாரி ராமகிருஷ்ணன், மாநகர காவல் உதவி ஆணையா் சோமசுந்தரம், மருத்துவமனை டீன் டாக்டா் ராமலிங்கம், இயக்குநா் புவனேஸ்வரன், மருத்துவ சுற்றுலாப் பிரிவு மேலாளா் சந்திரசேகரன், பி.எஸ்.ஜி. செவிலியா் கல்லூரி முதல்வா் ஜெயசுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில், உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், இருப்பினும் உறுப்பு தானத்துக்காக ஆயிரக்கணக்கானோா் காத்திருக்கும் நிலையில் இது தொடா்பான விழிப்புணா்வு அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். இதில், உறுப்பு தானம் செய்தவா்களின் உறவினா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com