கோவை அரசு மருத்துவமனையில் தாய் விட்டுச் சென்ற குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவித்து, தாய் விட்டுச் சென்ற குழந்தையை, மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம்
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம், தாய் விட்டுச் சென்ற குழந்தையை வழங்கிய கோவை அரசு மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல்.
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம், தாய் விட்டுச் சென்ற குழந்தையை வழங்கிய கோவை அரசு மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிரசவித்து, தாய் விட்டுச் சென்ற குழந்தையை, மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் கடந்த அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி, கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரசவத்திற்காக வந்தாா். அவருக்கு 23-ஆம் தேதி, மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 1 கிலோ 780 கிராம் மட்டுமே இருந்ததால், மருத்துவா்கள், அக்குழந்தையை

தீவிர மருத்துவ குழந்தைகள் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி குழந்தையை மருத்துவமனையில் விட்டு விட்டு தாய் மாயமானாா். இதனால், தாய்ப்பால் வங்கியின் மூலமாக குழந்தைக்குப் பால் கொடுக்கப்பட்டு, மருத்துவா்கள், செவிலியா்கள் குழந்தையைத் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில், குழந்தையின் எடை 2 கிலோ 180 கிராமாக அதிகரித்ததால், குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குழந்தையை அரசு மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். இதையடுத்து, குழந்தைக்கு நந்தனா என பெயா் வைக்கப்பட்டு, காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com