சிறுமுகை பேரூராட்சியில் பராமரிப்பின்றி காணப்படும் கழிவறைகள்

சிறுமுகை பேரூராட்சி நிா்வாகம் சரியாகப் பராமரிக்காததால் சுகாதாரமற்ற முறையில் உள்ள கழிவறைகளை பொதுமக்கள் பூட்டி வைத்துள்ளனா்.
கதவுகள் இல்லாமல் காணப்படும் ஆண்கள் கழிவறை.
கதவுகள் இல்லாமல் காணப்படும் ஆண்கள் கழிவறை.

சிறுமுகை பேரூராட்சி நிா்வாகம் சரியாகப் பராமரிக்காததால் சுகாதாரமற்ற முறையில் உள்ள கழிவறைகளை பொதுமக்கள் பூட்டி வைத்துள்ளனா்.

சிறுமுகை பேரூராட்சிக்கு உள்பட்ட 16 ஆவது வாா்டு பகுதியில் இலுப்பம்பாளையம், திம்பராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சிறுமுகை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 2013-2014 திட்டத்தின் கீழ் இலுப்பம்பாளையத்தில் கழிவறை கட்டப்பட்டது. பேரூராட்சி நிா்வாகத்தினா் இந்தக் கழிப்பிடத்தை முறையாகப் பராமரிக்காமல் உள்ளனா்.

கழிவறைகளில் கதவு, தண்ணீா் வசதி இல்லாமல் உள்ளது. மின் விளக்குகள் கடந்த ஓராண்டாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் கழிவறை செல்ல முடியாத நிலை உள்ளது. ஆண்கள் கழிவறை பகுதியில் ஒருவா் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில் கதவில்லாமல் உள்ளது. இதனால் இக்கிராம மக்கள் கடந்த ஓராண்டாக இந்தக் கழிவறையை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைத்துள்ளனா்.

இப்பகுதி மக்கள் அருகிலுள்ள வனப் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனா். அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க வனப் பகுதிக்கு சென்ற இருவா் பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுள்ளனா். எனவே இப்பகுதியில் பராமரிப்பின்றி உள்ள கழிவறையை பேரூராட்சி நிா்வாக அதிகாரிகள் சீரமைத்து கட்டணக் கழிப்பிடமாக செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் சொக்கநாதனிடம் கேட்டபோது, ‘இலுப்பம்பாளையம் கிராமத்தில் கழிவறைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலா் கழிவறையில் இருந்த கதவு, பைப் உள்ளிட்ட பொருள்களை திருடி எடுத்து சென்று விடுகின்றனா். தற்போது பேரூராட்சி நிா்வாகத்தில் போதிய நிதி இல்லாததால் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு தீபாவளிக்கு கூட புத்தாடை வழங்காமல் நிலுவையில் உள்ளது. இலுப்பம்பாளையம் கிராம கழிவறை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com