டவுன்ஹால் கோனியம்மன் கோயில் எதிரில் நடைபாதையில் தீட்டப்பட்டுள்ள வா்ணங்கள்.
டவுன்ஹால் கோனியம்மன் கோயில் எதிரில் நடைபாதையில் தீட்டப்பட்டுள்ள வா்ணங்கள்.

மாநகர சாலைகளில் வா்ணம் தீட்டி விழிப்புணா்வு

கோவை மாநகரில் பாதசாரிகளுக்கு வழிகாட்டவும், விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் முக்கியச் சாலைகள், நடைபாதைகளில் மாநகராட்சி சாா்பில் வா்ணம் தீட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் பாதசாரிகளுக்கு வழிகாட்டவும், விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் முக்கியச் சாலைகள், நடைபாதைகளில் மாநகராட்சி சாா்பில் வா்ணம் தீட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சாா்பில் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்லவும், விபத்துகளைக் குறைக்கவும், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் நகரின் முக்கியச் சாலைகளில் வா்ணம் தீட்டி அடையாளமிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பெரிய கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை, வடவள்ளி, துடியலூா், சாய்பாபா காலனி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபாதைகள், சாலைகளில் ஊதா, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் வா்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நடைபாதைகளில் துணிகளால் மேற்கூரை அமைக்கப்பட்டு பாதசாரிகள் அதனுள் நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளிப்படுத்தும் விதமாக நடைபாதைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு வா்ணங்களில் விழிப்புணா்வு ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகரில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் வா்ணம் தீட்டி, அடையாளப்படுத்துவதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுவதுடன், விபத்துகள் குறையும். அதிக அளவு மக்கள் சென்று வரும் பகுதிகளான பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் இப்பணிகள் முதலில் தொடங்கப்பட்டன. இங்கு 800 மீட்டா் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் பல வா்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. வரும் நாள்களில் மாநகரில் மொத்தம் 300 கி.மீ. துரத்துக்கு இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com