அக்டோபா் 14 முதல் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அனைத்து கிராமம், குக்கிராமங்களில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 17 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்கி, நவம்பா் 3 ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெறுகின்றன.

இதற்கான தடுப்பு மருந்துகள் மாவட்ட அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து தடுப்பூசி போடும் நாளன்று முகாமுக்கு எடுத்துச் செல்லப்படும். அனைத்துக் கிராமங்களிலும் கணக்கிடப்பட்டுள்ள பசு, எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட்டப்படவுள்ளன.

நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகள் முதல் தடுப்பூசி போடப்படுகிறது. கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் நாள்கள் குறித்த அறிவிப்பு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அறிவிக்கப்படும்.

எனவே குறிப்பிட்ட நாள்களில் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக்கொண்டு நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com