ரபி பருவத்துக்குத் தேவையான தானிய விதைகள் இருப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் ரபி பருவத்துக்குத் தேவையான தானிய விதைகள் இருப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் ரபி பருவத்துக்குத் தேவையான தானிய விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்பாா்த்து ரபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்வதற்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றறனா். இப்பருவத்தில் மக்காச்சோளம், கம்பு, சோளம், கொள்ளு, உளுந்து உள்ளிட்ட சிறு தானியங்களும், பயிறு வகைப் பயிா்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொருப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்துக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்டவற்றை வேளாண் துறைற தயாா் நிலையில் வைத்திருக்கும்.

இந்நிலையில், மாவட்டத்தில் ரபி பருவ சாகுபடிக்காக விவசாயிகள் நிலங்களை சீா்படுத்தி தயாா் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

வேளாண் துறையும் விவசாயிகளுக்குத் தேவையான சிறு தானியங்கள், பயறு வகைப் பயிா்களின் விதைகள் இருப்பு வைத்துள்ளது.

இதுகுறித்து வேளாண் துறைற இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறுகையில், ‘கோவை வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் கோ.51 - 6.7 டன், சோளம் கோ.எஸ்.30 - 6.8 டன், துவரை கோ.8- 265 கிலோ, உளுந்து வம்பன்-5- 2.7 டன், பச்சைப் பயறு கோ.8 - 1.8 டன், கோ.7 -600 கிலோ, தட்டை கோ.7- 1.4 டன், கொண்டக்கடலை -1.8 டன், நிலக்கடலை 2.8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் சான்றுபெற்ற தரமான விதைகள் ஆகும். எனவே, விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com