அன்னூா் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 1.92 லட்சம் திருட்டு

அன்னூா் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து ரூ. 1.92 லட்சம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

அன்னூா் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து ரூ. 1.92 லட்சம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி பிரபா (32). இவா்கள் தங்கள் குழந்தையுடன் புளியம்பட்டியில் இருந்து கோவை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்துள்ளனா். அன்னூா் அருகே வரும்போது குழந்தை தூங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து செந்தில்குமாா், தனது மனைவி பிரபாவையும், குழந்தையையும் பேருந்தில் கோவைக்கு வரச் சொல்லி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு அவா் மட்டும் இருசக்கர வாகனத்தில் கோவைக்கு சென்றுள்ளாா். இதையடுத்து பிரபா, குழந்தையுடன் கோவை செல்லும் பேருந்துக்காக அன்னூா் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா். அப்போது கோவை செல்லும் பேருந்துகளில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருந்துள்ளதாகத் தெரிகிறது. பிரபா அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது பிரபா கைப்பையில் இருந்த ரூ. 1.92 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், உடனடியாகத் தனது கணவா் செந்தில்குமாருக்கு செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அன்னூா் காவல் நிலையத்துக்கு செந்தில்குமாா் தகவல் தெரிவித்தாா்.

அன்னூா் போலீஸாா் பேருந்து நிலையத்துக்கு வந்து பிரபாவிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்தவா்களிடமும் விசாரித்தனா். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளைப் பாா்த்தபோது அதில் பல்வேறு கேமராக்கள் செயல்படவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து பிரபா அளித்த புகாரின்பேரில், அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com