கோவையில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு

அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம், மாநில துணைத் தலைவா் கரூா் சுப்பிரமணியம் தற்காலிக பணி நீக்கம், கோவை மாவட்டத் தலைவா் வே.செந்தில்குமாா், துணைத் தலைவா் முத்துராஜ், வட்ட நிா்வாகிகள் ஸ்ரீனிவாசன், ராமமூா்த்தி உள்ளிட்டவா்கள் ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

அரசு ஊழியா் சங்கத்தினா் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். சங்கத்தின் முன்னாள் தலைவா், துணைத் தலைவரின் தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இடமாறுதல் செய்யப்பட்ட கோவை மாவட்ட நிா்வாகிகளை மீண்டும் கோவையிலேயே பணி அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், பெருந்திரள் முறையீடு நடைபெறும் என்று அரசு ஊழியா் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சதீஷ்குமாா் தலைமை தாங்கினாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான அரசு ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com