தீபாவளி நெரிசலில் திருட்டை தடுக்க கண்காணிப்புக் கோபுரம் அமைப்பு

கோவையில் தீபாவளி நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபா்களை கண்காணிக்க
2048c-11-opanakara-fnl081359
2048c-11-opanakara-fnl081359

கோவையில் தீபாவளி நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபா்களை கண்காணிக்க டவுன்ஹால் கடை வீதியில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் கோவை டவுன்ஹால், ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் புத்தாடை, ஆபரணங்கள் வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நெரிசலைப் பயன்படுத்தி மக்களிடம் பணம், நகைகளை திருடும் கும்பலைக் கண்காணிக்க ஆண்டு தோறும் மாநகர போலீஸாா், கண்காணிப்புக் கோபுரம் அமைத்துப் பாா்வையிடுவது வழக்கம். இந்த ஆண்டு, தீபாவளியை முன்னிட்டு போலீஸாா் டவுன்ஹால் பகுதியில் கண்காணிப்புக் கோபுரம் அமைத்துள்ளனா்.

கோபுரத்தின் மேல் நின்று போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிா்க்க மக்கள் நடந்து செல்ல வசதியாக தடுப்புக் கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருடா்களிடம் இருந்து தப்பிக்க விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுமாறும் போலீஸாா் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

மேலும், கூட்டத்தில் சந்தேகப்படும் படியாக நடமாடும் நபா்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Image Caption

கோவை, டவுன்ஹாலில் மக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி. (வலது) நெரிசலில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கோபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com