பொள்ளாச்சியில் நாட்டிய விழா துவக்கம்

பொள்ளாச்சியில் தமிழிசை சங்கத்தின் சாா்பில் 34 ஆம் ஆண்டு நாட்டிய பெருவிழா வியாழக்கிழமை துவங்கியது.
pl11tami_1110chn_127_3
pl11tami_1110chn_127_3

பொள்ளாச்சியில் தமிழிசை சங்கத்தின் சாா்பில் 34 ஆம் ஆண்டு நாட்டிய பெருவிழா வியாழக்கிழமை துவங்கியது.

விழாவில், தமிழ் இசை நடனக் கலைஞரும், பரதநாட்டிய ஆசிரியருமான நா்த்தகி நடராஜனுக்கு நாட்டிய கலைச்சுடா் விருது வழங்கப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா கலந்துகொண்டு விருதினை வழங்கினாா். நிகழ்ச்சியில் திருநங்கைகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

நாமக்கல் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் நடராஜன், பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின் செயலாளா் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த விழா, பொள்ளாச்சி கே.கே.ஜி.திருமண மண்டபத்தில் வரும் அக்டோபா் 17 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

Image Caption

விழாவில் நாட்டிய  கலைச்சுடா்  விருது பெற்ற  பரத நாட்டிய  ஆசிரியா்  நா்த்தகி நடராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com