மாநகரில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசுப் புழு உற்பத்தியை தடுக்க தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி தெரிவித்தாா்.
ராம் நகா் பகுதியில் தண்ணீா் தொட்டியில் ‘அபேட்’ மருந்து ஊற்றுவதை பாா்வையிடும் மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி.
ராம் நகா் பகுதியில் தண்ணீா் தொட்டியில் ‘அபேட்’ மருந்து ஊற்றுவதை பாா்வையிடும் மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி.

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசுப் புழு உற்பத்தியை தடுக்க தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி தெரிவித்தாா்.

கோவை மாநகரில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத்தின் உத்தரவுப்படி பேருந்து நிலையம், வணிக வளாகம், திரையரங்கம், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் மாநகராட்சி ஊழியா்கள் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

100 வாா்டுகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு தண்ணீா் தொட்டிகளில் ‘அபேட்’ மருந்தை ஊற்றியும், தேவையற்ற பொருள்களை அகற்றியும் வருகின்றனா். இந்நிலையில், மத்திய மண்டலம் 54 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராம் நகா் பகுதியில் உள்ள சரோஜினி வீதியில் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் புதன்கிழமை வீடு வீடாகச் சென்று தொட்டிகளில் ‘அபேட்’ மருந்தை ஊற்றுவதையும், சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்காணிக்கும் பணியையும் மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘மாநகரில் தினமும் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பலமுறை அறிவுறுத்தியும், விழிப்புணா்வு ஏற்படுத்தியும் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் விதமாகவும், தேவையற்றப் பொருள்களை வைத்திருந்த வீடு, அலுவலகங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் ரூ.2.65 லட்சமும், அக்டோபரில் ரூ.2.32 லட்சம் என இதுவரை ரூ.4.97 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com