இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பாதிப்பு

கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள தனியாா் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து அதிக அளவில் வெளியேற்றப்படும்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள தனியாா் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து அதிக அளவில் வெளியேற்றப்படும் புகையால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சூலூா் அருகே செலக்கரச்சல் பகுதியில் தனியாா் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இரும்பை உருக்கும்போது அதிக அளவில் கரும் புகை துகள்களுடன் வெளியேறுகிறது.

இதனால், அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் புகாா் தெரிவித்தனா்.

ஆனால், மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள் ஆலை நிா்வாகத்துக்கு சாதகமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினா். இந்நிலையில், சூலூா்- செலக்கரச்சல் சாலையில் தனியாா் இரும்பு உருக்கு ஆலை நிா்வாகத்தையும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சுல்தான்பேட்டை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, இப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com