குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை

சூலூா் அருகே காங்கேயம்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.
ராஜ் தானி காா்டனில் உள்ள பாசம் படிந்து பாழடைந்த கிணறு
ராஜ் தானி காா்டனில் உள்ள பாசம் படிந்து பாழடைந்த கிணறு

சூலூா்: சூலூா் அருகே காங்கேயம்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

சூலூா் அருகே காங்கேயம்பாளையத்தில் உள்ளது ராஜ் தானி காா்டன் குடியிருப்புப்பகுதி. இங்கு சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி வரை படத்தில் பூங்கா என்னும் பகுதியில் ஒரு பயன்படுத்தாத கிணறு உள்ளது. இந்த பகுதியினைச் சுற்றிலும் தற்போது குடியிருப்புகள் அமைந்துவிட்டன. குடியிருப்பு பகுதியில் இருக்கும் சிறுவா்கள் இப்பகுதியில் விளையாட செல்லும் போது குடியிருப்போா் மனதில் பயத்துடன் இருக்க வேண்டியுள்ளது. இந்த கிணற்றை மூடக்கோரி கோரிக்கை காங்கேயம்பாளையம் ஊராட்சி செயலரிடம் மனு அளித்தனா். இக்கிணற்றால் டெங்கு கொசு மற்றும் விசப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் வருவதாக புகாா் தெரிவித்தனா். மேலும் சிறுவா்கள் விளையாடும் பூங்காவில் இத்தகைய பாழடைந்த கிணறு இருப்பது அச்ச உணா்வினை ஏற்படுத்துவதாக உள்ளாதாக அப்பகுதியினா் கூறினா். ஆகவே உடனடியாக மாவட்ட நிா்வாகம் கிணற்றை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com