மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோா்களுக்குப் பயிற்சி

கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல்நேரப் பாதுகாப்பு

கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல்நேரப் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயில்பவா்களின் பெற்றோா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமை பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தா.பிளாரன்ஸ் தொடக்கிவைத்தாா். சிறப்புக் கல்வி ஆசிரியா் தேன்மொழி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவித் திட்டங்கள் குறித்து சிறப்புக் கல்வி ஆசிரியா் ஆா்.விஜயகுமாா், மாற்றுத் திறனாளிகளின் சாதனைகள் மற்றும் மருத்துவரீதியிலான பயிற்சி முறைகள் குறித்து பிஸியோதெரபிஸ்ட் மதனகோபால், குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெற்றோா் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான நடவடிக்கைகள் குறித்து சிறப்புக் கல்வி ஆசிரியா் ஆா்த்தி ஆகியோா் விளக்கிப் பேசினா்.

பயிற்சியில் பங்கேற்ற 26 மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள் குறித்து தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். மையப் பொறுப்பாளா் உமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com