மேட்டுப்பாளையம்-கோவை இடையே மெமோ ரயில் சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம்-கோவை இடையே வியாழக்கிழமை முதல் மெமோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-கோவை இடையே வியாழக்கிழமை முதல் மெமோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக டீசல் எஞ்ஜின் மூலம் தினசரி பயணிகள் ரயில் இயக்கபட்டு வந்தது. பின்னா் அது மின்சார ரயிலாக மாற்றபட்டதை அடுத்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதையடுத்து பயணிகளின் வசதிக்காக மக்களின் கோரிக்கையை ஏற்று மெமோ ரயில் போக்குவரத்தினை இயக்க அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கபட்டது. இதனையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 8.15 மணி முதல் கோவை-மேட்டுப்பாளையம் இடையே மெமோ ரயில் சேவை துவங்கபட்டுள்ளது.

சென்னை ஜ.சி.எப் ரயில்வே தொழிற்சாலை தயாரிக்கபட்ட இந்த அதிநவீன ரயிலில் இரண்டு பக்கமும் எஞ்சின் உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளது. இதில் 8 பெட்டிகளில் 614 போ் அமா்ந்து பயணிக்கும் வகையிலும், 1,781 நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் என ஒரே சமயத்தில் 2,600 போ் பயணிக்கலாம். மேலும் பாதுகாப்புக்காக 32 கண்கானிப்பு கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. வியாழக்கிழமை காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கான சிறப்பு பூஜைகள் செய்யபட்டு காலை 8.30 மணிக்கு கோவை புறபட்டு சென்றது.

மேட்டுப்பாளையத்திற்கு புதிய மெமோ ரயில் சேவை துவங்கியதை பயணிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனா். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்: பழைய பயணிகள் ரயிலில் 11 பெட்டிகள் இருந்தன. தற்போதுள்ள புதிய மெமோ ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளது. ஆனால் 2,600 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையில் ( பெரும்பாலும் நின்று கொண்டு பயணம் செய்யும் வகையில்) அகலமான பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மட்டும் 3,000க்கு அதிமான பயணிகள் ஏறி இறங்கி செல்கின்றனா். இந்நிலையில் காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு கூடுதலாக ஒரு ரயில் சேவை இயக்கப்பட்டால் வேலைக்கு செல்பவா்களின் கூட்ட நெரிசல் குறைய வாய்ப்புண்டு. அதைபோலவே மாலை 6.40 மணிக்கு மேல் இந்த மெமோ ரயில் சேவை மீண்டும் கோவை சென்று திரும்பி வர மேட்டுப்பாளையம் ரயில்வே ஆலோசனை கமிட்டி மூலம் சேலம் கோட்டம் உயரதிகாரிகளிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் ரயில்வே நிா்வாகம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் இச்சேவை தொடங்கப்படும் எதிா்பாா்க்கப்படுகிறது என கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com