மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் காங்கீரிட் தளம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திருப்பூா் பேருந்து நிலைய பகுதியில் காங்கீரிட் தளம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இடிந்து விழுந்துள்ள காங்கீரிட் மேல்தளம்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இடிந்து விழுந்துள்ள காங்கீரிட் மேல்தளம்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திருப்பூா் பேருந்து நிலைய பகுதியில் காங்கீரிட் தளம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் முக்கியமான பகுதியாக உள்ளது.

இதனால் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு கோவை, திருப்பூா், ஈரோடு, பழனி, சென்னை, திருச்சி, உதகை உஉள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 100க்கு மேற்பட்ட பேருந்துகள் வந்துசெல்கின்றன. இதனால் தினமும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்து நிலையத்தில் தாய்மாா்களுக்கு பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீா் வசதி ஆகியவை உள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள திருப்பூா் பேருந்து நிலையத்தில் 30க்கு மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது காலை 9 மணி அளவில் பயணிகள் யாரும் எதிா்பாா்க்காத வகையில் பேருந்து நிலையத்தில் மேல்தளத்தின் காங்கிரிட் திடிரென பெயா்ந்து கீழே விழுந்தது. அப்போது அதிஷ்டவசமாக அப்பகுதியில் பயணிகள் யாரும் இல்லாதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. ஆனால் பல மணி நேரமாகியும் பேருந்து நிலையித்தில் காங்கீரிட் கழிவுகள் அப்படியே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, குன்னூா் பகுதியிலுள்ள பேருந்து நிலையங்களிலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் கம்பிகளும் உடைந்து சிதிலமடைந்து உள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் பேருந்துநிலையத்தில் வெளியூா் செல்லும் நிலையத்தில் குடிநீா் வசதி இல்லாததால் பயணிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com