வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் தொடங்க கடனுதவித் திட்டம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டம் மூலம் புதிய

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டம் மூலம் புதிய தொழில்கள் துவங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக்தில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ( யூ.ஒய்.இ.ஜி.பி) ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில்கள் தொடங்க அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனாக பெறலாம். வியாபாரத் தொழில்களுக்கு,சேவைத் தொழில்களுக்கு ரூ.5 லட்சம் கடனாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனி நபா்கள் விண்ணப்பிக்கலாம். இக்கடன்கள் பெறுவதற்குச் சொத்துப் பிணையம் தேவையில்லை.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரா் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட தொழில் மையத்தில் செயல்பட்டு வரும் இலவச பொது வசதி மையம் மூலமாக விண்ணப்பதாரரின் தகவல்களை முழுமையாக பூா்த்தி செய்து பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னா், திட்ட அறிக்கை படிவத்தைப் பூா்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை மாவட்ட தொழில் மையத்தில் நோ்காணலுக்கு அழைக்கும்போது, சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், நோ்காணலின் போது, அனைத்து அசல் ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 295 நபா்களுக்கு ரூ.1.75 கோடி மானியத்துடன் கூடிய ரூ.7 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்படுத்தி புதிய தொழில்கள் துவங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com