உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவித் தொகை

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை தகுதியான விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை தகுதியான விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்காக உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் திருமணம், கல்வி, விபத்து உள்ளிடவற்றுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தவிர 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது. 
எனவே, தகுதியுடைய விவசாயிகள் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு கோட்டாட்சியர் அல்லது தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலர்களை தொடர்புக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com