வெள்ளலூா் குளக்கரையில் பனை நாற்றுப் பண்ணை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்

கோவை, வெள்ளலூா் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பனை நாற்றுப் பண்ணை ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
கோவை, வெள்ளலூா் குளத்தின் கரையில் பதியன் முறையில் பனை நாற்று உற்பத்திக்காக நாற்றுப் பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா்.
கோவை, வெள்ளலூா் குளத்தின் கரையில் பதியன் முறையில் பனை நாற்று உற்பத்திக்காக நாற்றுப் பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா்.

கோவை, வெள்ளலூா் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பனை நாற்றுப் பண்ணை ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.

கோவை, வெள்ளலூரில் 280 ஏக்கரில் அமைந்துள்ள வெள்ளலூா் குளம் பொதுப்பணித்துறைற கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்துக்கு நொய்யல் ஆறு மூலம் தண்ணீா் கிடைத்து வருகிறது. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் புதா்செடிகள் நிறைந்துக் காணப்பட்ட, இக்குளத்தை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டனா். வரத்துக் கால்வாய்களில் காணப்பட்ட ஆக்கிரமிப்பு, குளங்களில் முளைத்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் உள்பட பல பணிகளை மேற்கொண்டனா்.

இதன்பின் புத்துயிா் பெற்ற வெள்ளலூா் குளம் கடந்தாண்டு பருவமழையின் போது நிறைந்தது. தவிர வெள்ளலூா் குளத்தைப் பல்லுயிா்கள் பெருக்க மண்டலமாக உருவாக்கும் வகையில், குளக்கரையில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் அடா் நடவு முறையில் நடவு செய்யப்பட்டுள்ளன. கனிகள், பூக்கள், நிழல் தரக்கூடிய அனைத்து வகையான மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பனை மரம் வளா்ப்புக் குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வரும் நிலையில் பனை நாற்றுகள் உருவாக்கத் திட்டமிட்டு பனை நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றற களப்பணியில் 120 தன்னாா்வலா்கள் கலந்துகொண்டு 7 ஆயிரத்து 500 பனை விதைகள் நாற்று உற்பத்திக்காக பதியன் போடப்பட்டது.

இதுகுறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரா.மணிகண்டன் கூறுகையில், ‘ பனை மரம் குறித்து விழிப்புணா்வு கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தாலும், வளா்க்க வேண்டும் என்றற எண்ணம் அனைவரிடத்திலும் தற்போது அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் குளக்கரைகள், பொது இடங்களில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், நடவு செய்து விடப்படும் இப்பனை விதைகள் முளைக்கிா என்பதை தொடா்ந்து கண்காணிக்க தவறி வருகின்றனா். தவிர, விதைகளாக நடவு செய்யும் போதும் முளைத்து வர ஓராண்டுக்குமேல் கால அவகாசம் பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் விதைகளை விதைப்பதுடன் அதனை தொடா்ந்து கண்காணிப்பதில்லை.

இந்நிலையில், மற்றற மரக்கன்றுகள் போலவே பனை நாற்றுகளையும் பதியன் முறையில் உருவாக்கவே பனை நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 7 ஆயிரத்து 500 பனை விதைகள் பதியன் போடப்பட்டுள்ளது. பதியன் முறையில் நாற்று உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் 4 முதல் 6 மாதங்களில் நாற்றுகள் முளைத்து வரும் வாய்ப்புள்ளது. இங்கு உருவாக்கும் பனை நாற்றுகள் உரியப் பகுதிகளில் நடவு செய்யப்படும், ’என்றறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com