பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம்: இன்றுமுதல் முன்பதிவு துவக்கம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் 6 வாரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளதால்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் 6 வாரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளதால் இன்று முதல் இணையதளத்தில் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.  
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சிக்கு உள்பட்ட பரளிக்காடு, பூச்சிமரத்தூர் பகுதிகளில் காரமடை வனத் துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து சூழல் சுற்றுலா நடத்தி வருகின்றனர்.
மலைவாழ் மக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலா மையத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பில்லூர் அனையின் நீர்த் தேக்க பகுதியில் நடைபெறும் படகு சவாரி பயணம் மேற்கொண்டு இயற்கையை கண்டு ரசிக்க முடியும்.
தென்மேற்குப் பருவ மழை காரணமாக பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி 88,000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
எனவே, பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் நீர்த் தேக்க பகுதியில் நடைபெற்று வந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டு, முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பருவ மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதும் நிறுத்தபட்டுள்ளதால் கடந்த 6 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் வரும் வாரம் முதல் மீண்டும்  துவங்க உள்ளதாக காரமடை வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். 
மேலும், இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (இன்று) முதல் இணையதளம் மூலம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com