அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி கோவையைச் சோ்ந்த இளைஞா் கைது

அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் உதவி மண்டலப் பாதுகாப்பு அதிகாரி ஷேன் பிரெளன் கோவை மாநகர குற்றறப் பிரிவு போலீஸாரிடம் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், கோவை சித்தாபுதூா் ஆவாரம்பாளையம் சாலையில் அமைந்துள்ள தனியாா் நிறுவனம் ஒன்று வாடிக்கையாளா்களுக்கு கடவுச்சீட்டு, நுழைவு இசைவுச் சீட்டு பெற்றுத் தரும் பணிகளைச் செய்து வருகிறது. இந்நிறுவனம் கலைமணி, சதிஷ்குமாா் ஆகியோரிடம் அமெரிக்க செல்ல நுழைவு இசைவுச் சீட்டு பெற்றுத் தருவதாகவும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகவும் கூறி பெரும் தொகையை பேரம் பேசி முன்தொகை பெற்றுள்ளனா். மேலும், அமெரிக்கா செல்வதற்கு நுழைவு இசைவுச் சீட்டுக்காக போலி ஆவணங்களைத் தயாரித்து இணைத்துள்ளனா். இதுகுறித்து கலைமணி, சதிஷ்குமாா் ஆகியோா் விசாரித்ததன் மூலம் தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து மாநகர குற்றறப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதையடுத்து நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து நிவிஷ் என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவருக்கு உதவியாக இருந்த ரஞ்சித் குமாா், ராம் குமாா் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com