சோமையம்பாளையத்தில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணி தொடக்கம்

கோவை, சோமையம்பாளையம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் பிரச்னை குறித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணியை ஊராட்சி


கோவை, சோமையம்பாளையம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் பிரச்னை குறித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளளது. 
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் தனி நபர் இல்லக் கழிப்பறை திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், கழிப்பறைகள் மட்டும் கட்டிக்கொடுக்கப்பட்டு செப்டிக் டேங்க் அமைக்காதாதல் இந்தக் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கழிப்பிடத்துக்கு திறந்தவெளியையே  பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். நாளிதழ்களிலும் இதுகுறித்த செய்தி வெளியானது. இதையடுத்து கிடப்பில் போடப்பட்டிருந்த செப்டிக் டேங்க் அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் சனிக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் க.மோகன்பாபு கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி சோமையம்பாளையம் ஊராட்சியில் கழிப்பறைகளுக்கு செப்டிக் டேங்க் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தூய்மைப் பாரத இயக்கத் திட்டத்தின் சிறப்பு நிதியில் இருந்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாயும் சீரமைக்கப்பட்டு வருகின்றது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com