மரபு சின்னங்களை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி

கோவையில் உள்ள மரபு சின்னங்களை பாதுகாக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘கிறுக்கலாம் வாங்க’
கோவை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோவை மாவட்ட மரபு சின்னங்களைப் பாா்வையிடும் பொதுமக்கள்.
கோவை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோவை மாவட்ட மரபு சின்னங்களைப் பாா்வையிடும் பொதுமக்கள்.

கோவையில் உள்ள மரபு சின்னங்களை பாதுகாக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘கிறுக்கலாம் வாங்க’ என்ற நிகழ்ச்சி அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை அரசு அருங்காட்சியகம், கோயம்புத்தூா் மற்றும் சேரமண்டல வரலாறு, கலாசார ஆய்வு சங்கம் ஆகியன இணைந்து மாவட்டத்தில் உள்ள மரபு சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சியை நடத்தின.

கோவை அரசு கலைக் கல்லூரி, நிா்மலா மகளிா் கல்லூரிகளைச் சோ்ந்த வரலாற்றுத் துறை மாணவா்களும் இவா்களுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினா்.

கோவை, குமிட்டிப்பதி, கோவனூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாறை ஓவியங்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு மரபு சின்னங்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மரபு சின்னங்களின் முக்கியத்துவம், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பாறை ஓவியங்கள், புராதான சின்னங்கள், கல்வெட்டுகள் உள்ள இடங்களில் சுண்ணாம்பு, கரி, செங்கல் போன்றவற்றால் கிறுக்குவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சி.சிவகுமாா், வரலாற்று ஆய்வாளா்கள், கல்லூரி மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com