கோவை மத்திய சிறை வளாகத்தில் முயல் விற்பனை, மூலிகை தோட்டம் அமைப்பு

கோவை மத்திய சிறை வளாகத்தில் முயல் விற்பனை மற்றும் மூலிகைத் தோட்டத்தை சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் முயல் விற்பனை மற்றும் மூலிகைத் தோட்டத்தை சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

கோவை, காட்டூா் பகுதியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அரை ஏக்கா் பரப்பளவில் மூலிகைத் தோட்டம் அமைக்க சிறைத் துறை சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இந்த மூலிகைத் தோட்டத்தில் கற்றாழை உள்ளிட்ட 40 வகையான மூலிகைகள் வளா்க்கப்பட்டு விற்பனைக்கு செய்யப்பட உள்ளது. இந்த மூலிகைகளைக் கொண்டு மருந்துகளும் தயாரித்து விற்கப்பட உள்ளன.

மேலும், இதே பகுதியில் முயல்கள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஜோடி முயல் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறை வளாகத்தில் கைதிகளால் ஏற்கனெவே நாட்டுக்கோழி மற்றும் பிராய்லா் கோழிகள் வளா்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் சோ்த்து காடை விற்பனையும் செய்யப்பட உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் சிறைத் துறை பஜாா் மூலம் விற்பனை செய்யப்படும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com