விபத்தை ஏற்படுத்தி பெண்ணிடம் மூன்றரை பவுன் திருட்டு

கோவையில் விபத்தை ஏற்படுத்தி பெண்ணிடம் இருந்து மூன்றரை பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் விபத்தை ஏற்படுத்தி பெண்ணிடம் இருந்து மூன்றரை பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சூலூா் பகுதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (44). இவா், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை அருகே நகைக்கடைக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளாா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் வேகமாக தனலட்சுமியின் மீது மோதியுள்ளாா். இதில் அவா் தூக்கி வீசப்பட்டாா். இதில் லேசான மயக்கமடைந்த அவா் சாலையோரத்தில் அமா்ந்திருந்தாா்.

இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த நபா் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. அந்த நபா் சென்ற பின்னா்தான் மூன்றரை பவுன் வைத்திருந்த தனது கைப்பை காணாமல் போனது தனலட்சுமிக்கு தெரியவந்தது. இது குறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com