23 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவு: ஆணையா் தகவல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 23 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவுற்றதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 23 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவுற்றதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் தினமும் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அவற்றை மாநகராட்சி ஊழியா்கள் மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்து வருகின்றனா். இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் இருந்து வெள்ளலூருக்கு குப்பை கொண்டு செல்லும் அளவைக் குறைப்பதற்காக, கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூா், ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் 69 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக 50 மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளைச் சேகரித்து மக்காத குப்பைகளை வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கும், மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பு மையங்களுக்கும் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மாநகரில் பல இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் மட்டுமே உரம் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘மாநகரப் பகுதிகளில் 23 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுற்றுள்ளன. இதில், 5 மையங்ளில் உரம் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள மையங்களில் விரைவில் பணிகள் தொடங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com