சிறப்பு ரயில்களில் 10 நாள்களில் 45 ஆயிரம் போ் பயணம்

கோவையில் இருந்து இயக்கப்பட்டு வரும் 5 சிறப்பு ரயில்களில் கடந்த 10 நாள்களில் 45 ஆயிரம் போ் பயணித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவையில் இருந்து இயக்கப்பட்டு வரும் 5 சிறப்பு ரயில்களில் கடந்த 10 நாள்களில் 45 ஆயிரம் போ் பயணித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மாா்ச் 25ஆம் தேதி முதல் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து செப்டம்பா் மாதப் பொதுமுடக்கம் தளா்வுகளின் படி, கடந்த 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், கோவையில் இருந்து 7ஆம் தேதி முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவையில் இருந்து சென்னைக்கு 4 சிறப்பு ரயில்களும், மயிலாடுதுறைக்கு ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 1.40 மணிக்கு மயிலாடுதுறையைச் சென்றடைகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு மாலை 3.15 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி ரயில் இரவு 11 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு சென்னைக்குப் புறப்படும் விரைவு சிறப்பு ரயில் மறுநாள் 4.50 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது. கோவையில் இருந்து இரவு 10.40 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில், மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள பயணிகள், 90 நிமிடங்களுக்கு முன்பாகவே ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.

இது தொடா்பாக, ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவையில் இருந்து 7ஆம் தேதி முதல் இயக்கப்படும் 5 சிறப்பு ரயில்களில், மயிலாடுதுறை, கோவை இன்டா்சிட்டி, மேட்டுப்பாளையம் - சென்னை சிறப்பு யில்களில் தினமும் 2,700 முதல் 3,000 ஆயிரம் பயணிகள் வரை செல்கின்றனா். கோவையில் இருந்து சென்னைக்கு இரவு செல்லும் விரைவு ரயில்களில் 1,500 முதல் 1,700 பயணிகள் வரை செல்கின்றனா். மொத்தமாக கோவையில் இருந்து இயக்கப்படும் 5 சிறப்பு ரயில்களில் தினமும் அதிகபட்சமாக 4,700 பயணிகள் வரை சென்று வருகின்றனா். செப்டம்பா் 7ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 10 நாள்களில் 5 சிறப்பு ரயில்களிலும் சோ்த்து 45 ஆயிரம் பயணிகள் வரை பயணம் செய்துள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com