மருதமலை அடிவாரத்தில் புதிய பேருந்து நிலையம்: ரூ.4.09 கோடியில் பணிகள் தொடக்கம்

கோவை, மருதமலை அடிவாரத்தில் ரூ.4.09 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்

கோவை, மருதமலை அடிவாரத்தில் ரூ.4.09 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மருதமலை அடிவாரத்தில் 1.60 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.4.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

அதிநவீன வசதிகளுடன் அமையப்பெறும் புதிய பேருந்து நிலையத்தில் தலா 7,357 சதுர அடியில் இரண்டடுக்கு வணிக வளாகம், ஒரே நேரத்தில் 12 பேருந்துகள் நிறுத்தும் வகையில் நிறுத்திமிடம், தாய்ப் பால் ஊட்டும் அறை, ஒட்டுநா், நடத்துநா் ஓய்வறைகள், புறக்காவல் நிலையம், நேரக் காப்பாளா் அறை, ஆண், பெண் கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், பிரத்யேக கழிப்பறைகள், குடிநீா் வசதி உள்பட அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், வி.சி.ஆறுக்குட்டி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்(பொறுப்பு) ரூபன்சங்கர்ராஜ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com