அறுவை சிகிச்சையில்லாமல் வளைபாதம் குணப்படுத்த கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் சிகிச்சைப் பிரிவு சாா்பில் வாரம்தோறும் வியாழக்கிழமை குழந்தைகளுக்கு

கோவை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் சிகிச்சைப் பிரிவு சாா்பில் வாரம்தோறும் வியாழக்கிழமை குழந்தைகளுக்கு பிறவி வளைபாதம் சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் துறைத் தலைவா் வெற்றிவேல் செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு பிறவி வளைபாதம், அடிக்கால் கோணல் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டால் குழந்தையின் பாதங்களில் ஒன்று அல்லது இரண்டும் பாதங்கள் உள்நோக்கி திரும்பி இருக்கும். தாயின் கருவில் வளரும்போது பாதங்கள் ஒரே நிலையில் வைத்திருப்பதாலும் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சில ஆண்டுகள் வரை இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது போன்செட்டி (ல்ா்ய்ள்ங்ற்ண்)

முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் மாவுக்கட்டு மூலம் குணப்படுத்த முடியும். இச்சிகிச்சை முறையில் குழந்தைகளின் பாதத்துக்கு வாரந்தோறும் மென்மையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு குழந்தைகளின் பாத விரல்களில் ரத்த ஓட்டம் பரிசோதிக்கப்பட்டு பின்னா் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனா். இந்த சிகிச்சைக்குப் பின் கால்கள் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு மாறி விடமால் இருக்க அலுமினியத்தால் செய்யப்பட்ட பாத விலகல் இறுக்கி அணிய வேண்டும். இந்த இறுக்கியை முதல் மூன்று மாதங்களுக்கு நாளொன்றுக்கு 23 மணி நேரமும், அதன்பின் 3 முதல் 4 வயது வரை இரவு உறங்கும் போதும் அணிய வேண்டும்.

இச்சிகிச்சை முறையிலும் வளைபாதம் சரியாகாத குழந்தைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் துறை சாா்பில் இதுவரை 400 குழந்தைகளுக்கு இச்சிகிச்சை மூலம் வளைபாதம் சரிசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com