கருமத்தம்பட்டியில் ‘மோடி கிச்சன்’ இன்று திறப்பு

கருமத்தம்பட்டி வினோபா நகரில் ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில் ‘மோடி கிச்சன்’ சமையல் அறை வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளதாக கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் ஜெய்ஹிந்த் முருகேசன் தெரிவித்துள
கால் டாக்ஸி ஓட்டுநா் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்குகிறாா் கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளா் ஜெய்ஹிந்த் முருகேஷ்.
கால் டாக்ஸி ஓட்டுநா் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்குகிறாா் கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளா் ஜெய்ஹிந்த் முருகேஷ்.

கருமத்தம்பட்டி வினோபா நகரில் ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில் ‘மோடி கிச்சன்’ சமையல் அறை வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளதாக கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் ஜெய்ஹிந்த் முருகேசன் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஏழைக் குடும்பங்களுக்கு பாஜகவினா் உணவு வழங்க வேண்டும் பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் ஜெய்ஹிந்த் முருகேஷ் சூலூா், கலங்கல், பட்டணம், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, அரசூா் உள்ளிட்ட பகுதிகளில் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், உணவின்றித் தவித்து வரும் வட மாநிலத் தொழிலாளா்கள் 300 பேருக்கு அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கி வருகிறாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சூலூா் வட்டாரத்தில் உணவில்லாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் வகையில் ஒரே நேரத்தில் 1,000 பேருக்கு உணவு சமைக்கும் வகையில் ‘மோடி கிச்சன்’ சமையலறை கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரில் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.

தினமும் ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கத் தேவையான பொருள்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. சூலூா் பகுதியில் உணவு தேவைப்படுவோா் தனக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com