விஜிஎம் மருத்துவமனை சாா்பில் உலக மஞ்சள் காமாலை தின கருத்தரங்கம்: கமல்ஹாசன் பங்கேற்பு

உலக மஞ்சள் காமாலை தினத்தை முன்னிட்டு விஜிஎம் மருத்துவமனை நடத்தும் வலைதளக் கருத்தரங்கில் நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் சிறப்புரையாற்ற உள்ளாா்.

உலக மஞ்சள் காமாலை தினத்தை முன்னிட்டு விஜிஎம் மருத்துவமனை நடத்தும் வலைதளக் கருத்தரங்கில் நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் சிறப்புரையாற்ற உள்ளாா்.

இது குறித்து கோவை விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளைத் தலைவா் மருத்துவா் வி.ஜி.மோகன் பிரசாத் வெளியிட்ட செய்தி:

உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் தேதியை உலக மஞ்சள் காமாலை தினமாக கடைப்பிடித்து வருகிறது. இதை முன்னிட்டு விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை மற்றும் கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து அகில இந்திய அளவிலான வலைதளக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நோய்கள் தடுப்பதில் சமுதாயத்தின் பங்கு என்ன? என்ற தலைப்பில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த வலைதளக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. யூ டியூப் வாயிலாக இதில் அனைவரும் பங்கேற்கலாம். இணையதளத்தில் இதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.  இதில் இணையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com