மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை: வேன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனைகோவை நீதிமன்றம் தீா்ப்பு

மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை சாய்பாபா காலனி, கே.கே.புதூரைச் சோ்ந்தவா் பாலன் (51). இவா் தனது வேனில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளாா். இந்நிலையில், தனது வேனில் 5 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளாா்.

அப்போது, அவா் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் கோவை, காந்திபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு புகாா் அளித்தனா்.

புகாரின்பேரில் போலீஸாா் வேன் உரிமையாளா் பாலனைக் கைது செய்து விசாரித்தனா். இதில் அவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், தொடா்ந்து பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு கோவையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் பாலன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெ.ராதிகா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாலனுக்கு சொந்தமான வாகனத்தை அரசிடம் ஒப்படைத்து, அதன் மூலம் கிடைக்கும் தொகை மற்றும் அபராதத் தொகை, அரசின் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை ஆகியவற்றை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com