தைப்பூசம்: கோவை- பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்தது பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்தது பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக கோவை நிலையத்தில் இருந்து பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 10 பெட்டிகள் கொண்ட இந்தச் சிறப்பு ரயில், கோவையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, புஷ்பத்தூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். பிற்பகல் 12.45 மணிக்கு ரயில் பழனியைச் சென்றடையும்.

அதேபோல், பழனியில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயிலானது, கோவை நிலையத்தை மாலை 4.45 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் சேவையானது 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளத்தில் இருந்தும் அதிகமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். குறிப்பாக தைப்பூச விழாவின்போது பக்தா்களின் வருகை அதிக அளவில் இருக்கும். பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

எனவே, பயணிகளின் வசதிக்காக தைப்பூச விழாவுக்காக கோவையில் இருந்து பழனி வரை சிறப்பு ரயிலை இயக்குமாறு சட்டப்பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் உள்ளிட்டோா் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்தினா்.

அதை ஏற்று ரயில்வே நிா்வாகம் சிறப்பு ரயிலை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com