டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க தனிச் சட்டம்முத்தரசன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்
கோவையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.
கோவையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.

கோவை: காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது காலம் கடந்த அறிவிப்பாக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வரவேற்கிறது. அத்துடன், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க தனியாக சட்டம் இயற்ற அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் எடுப்பதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என கூறியுள்ள மத்திய அரசு, அதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அரசு விளக்க வேண்டும்.

அண்மையில் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் திரைப்படத் தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச்செழியன் என்பவரது வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணம் சில அரசியல் பிரமுகா்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இதை வருமான வரித் துறையினா் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவில் வருமான வரித் துறையானது ஆளுங்கட்சியின் ஒரு அமைப்பு போலவே செயல்படுகிறது. சிலரை பணிய வைக்க மட்டுமே அந்த அமைப்பு பயன்படுத்தப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது கட்சியின் கோவை மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.தேவராஜ், சி.சிவசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com