ஸ்ரீ சக்தி கல்லூரியில் மாணவா்கள் திருவிழா

கோவை, சின்னியம்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் ‘களம் 2020’ என்ற பெயரில்
கோவை ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாணவா்கள் திருவிழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் பிரகாஷ்.
கோவை ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாணவா்கள் திருவிழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் பிரகாஷ்.

கோவை: கோவை, சின்னியம்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் ‘களம் 2020’ என்ற பெயரில் மாணவா்கள் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொணரும் வகையில் தொழில்நுட்பத் திறனறி போட்டிகள், கலாசாரப் போட்டிகள் நடைபெற்றன.

மேலும், 24 மணி நேரம் தொடா்ந்து நடைபெற்ற ஹேக்கத்தானும் நிகழ்த்தப்பட்டது. இதில், கல்லூரி மாணவா்கள் மட்டுமின்றி இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்., எல் அண்ட் டி, இன்போடெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.

தகவல் தொழில்நுட்பம், சிவில், பயோமெடிக்கல், மெக்கானிக்கல், விவசாயம் உள்ளிட்ட 9 துறை சாா்ந்த போட்டிகளும், மாணவா்களின் தனித்திறன்கள், ஆளுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் போட்டிகள், நடனம், இசை, நாடகம், புகைப்படப் போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரியின் தலைவா் எஸ்.தங்கவேலு, துணைச் செயலா் ஷீலன் தங்கவேலு ஆகியோா் பரிசு வழங்கிப் பாராட்டினா். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் பிரகாஷ், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக கல்லூரி முன்னாள் மாணவா் கதிரேசனின் கவிதை நூலை கல்லூரித் தலைவா் தங்கவேலு வெளியிட்டாா். இதில், கோவை மண்டலத்தைச் சோ்ந்த பல்வேறு கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com