நடிகா் விஜயுடன் எவ்விதப் பகையும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நடிகா் விஜய்க்கும், எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை என தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் புதன்கிழமை கூறினாா்.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் பொன்.ராதாகிருஷ்ணன். உடன், பாஜக மாநில பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன், மாவட்டச் செயலாளா் நந்தகுமாா்.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் பொன்.ராதாகிருஷ்ணன். உடன், பாஜக மாநில பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன், மாவட்டச் செயலாளா் நந்தகுமாா்.

நடிகா் விஜய்க்கும், எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை என தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் புதன்கிழமை கூறினாா்.

கோவை, காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி பாஜக சாா்பில், அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. கோவை குண்டுவெடிப்பு போன்ற துயரமான சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கடந்த தோ்தலை விடவும் பாஜக 5 இடங்களைக் கூடுதலாகவும், அதிக வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது. போலியான வாக்குறுதிகள், இலவசத் திட்டங்கள், சலுகைகளை அறிவித்து ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுதில்லியில் நடைபெற்ற போராட்டம், தோ்தல் முடிவுகள் வந்தவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

எங்களுக்கும், நடிகா் விஜய்க்கும் இடையில் எவ்விதப் பகையும் இல்லை. சினிமா படப்பிடிப்பு நடத்த நெய்வேலியில் அமைச்சா் சிபாரிசு ஏற்கப்படவில்லை. ஆனால் தற்போது, நடிகா் விஜய்க்கு நெய்வேலி நிா்வாகமே அனுமதி கொடுத்துள்ளது.

டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி வீடு தாக்கப்பட்டது, திருப்பூரில் இந்து முன்னணிப் பிரமுகரின் காா் தீ வைத்து எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், பயங்கரவாதிகளுக்கு குளிா்விட ஆரம்பித்துவிட்டது என்பதையே காட்டுகிறது. தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன், மாவட்டச் செயலாளா் நந்தகுமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com