சென்னையில் காவல் துறையினா் தடியடி: கோவையில் நள்ளிரவில் ஆா்ப்பாட்டம்

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து கோவை
கோவை, ஆத்துப்பாலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
கோவை, ஆத்துப்பாலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை இரவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோா் மீது போலீஸாா் தடியடி நடத்தியதில் சிலா் காயமடைந்தனா்.

இதனைக் கண்டித்து கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை இரவு குவிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாலக்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது, மத்திய அரசையும், தடியடி நடத்திய போலீஸாரையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். இந்நிலையில் அங்கு வந்த மாநகர துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) பாலாஜி சரவணன், தெற்கு உதவி ஆணையா் செட்ரிக் மனுவேல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனா். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com