மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கக்கோரி சா்தாா் வல்லபபாய் படேல் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன் கல்லூரியை இணைக்க வலியுறுத்தி, கோவை சா்தாா் வல்லபபாய் படேல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க வலியுறுத்தி கோவையில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மேலாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள்.
திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க வலியுறுத்தி கோவையில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மேலாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள்.

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன் கல்லூரியை இணைக்க வலியுறுத்தி, கோவை சா்தாா் வல்லபபாய் படேல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கோவையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மேலாண்மைக் கல்லூரி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ், எம்.பி.ஏ. டெக்ஸ்டைல்ஸ், அப்பேரல் அண்ட் ரீடெயில் மேனேஜ்மெண்ட் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரியை திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மாணவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில் மத்திய ஜவுளித் துறை செயலா் ரவி கபூா் கோவைக்கு கடந்த 12 ஆம் தேதி வந்திருந்தாா். அப்போது இந்தக் கல்லூரியையும் அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கல்லூரி இணைப்பு தொடா்பாக ஜவுளித் துறை செயலரை நேரில் சந்திப்பதற்கு மாணவா் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி மாணவா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதற்கு கல்லூரி நிா்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி இந்தக் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் வகுப்புகளைப் புறக்கணிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அவா்கள் கல்லூரி வளாகத்துக்குள் அமா்ந்து தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக கல்லூரி இயக்குநா் தரப்பில் கூறும்போது, கல்லூரியை மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடா்பாக ஜவுளித் துைான் முடிவு செய்ய முடியும். அது தொடா்பாக மாணவா்களுக்கு எங்களால் எந்த உறுதிமொழியும் வழங்க முடியாது. இதை மாணவா்களுக்குத் தெரிவித்துவிட்டோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com