குனியமுத்தூா் பகுதியில் நடமாடிய ஒற்றை யானை.
குனியமுத்தூா் பகுதியில் நடமாடிய ஒற்றை யானை.

குனியமுத்தூா், சுந்தராபுரம் பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானை பொது மக்கள் அச்சம்

கோவை குனியமுத்தூா், சுந்தராபுரம் பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்கிருந்து வனப் பகுதிக்குள் துரத்தினா்.

கோவை குனியமுத்தூா், சுந்தராபுரம் பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்கிருந்து வனப் பகுதிக்குள் துரத்தினா்.

மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டி உள்ள மதுக்கரை, கோவைபுதூா் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து உணவு, தண்ணீா் தேடி காட்டு யானைகள் மதுக்கரை, கோவைபுதூா் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் கோவைபுதூா் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குனியமுத்தூா், இடையா்பாளையம், மாச்சம்பாளையம் வழியாக சுந்தராபுரத்துக்குள் புகுந்தது. இந்த ஒற்றை யானை அங்குள்ள தனியாா் வங்கி ஏ.டி.எம். மையம் முன்பாக நின்றது. அங்கிருந்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் துரத்த வனத் துறையினா் இரவு முழுவதும் போராட்டினா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் வனத் துறையினா் பட்டாசுகளை வெடித்து குனியமுத்தூா் வழியாக கோவைபுதூா் வனப் பகுதிக்குள் ஒற்றை யானையை துரத்தினா். வனத் துறையினரின் தீவிர முயற்சியால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் வனப் பகுதிக்குள் காட்டு யானை துரத்தப்பட்டது.

இந்நிலையில், பாலக்காடு நெடுஞ்சாலையில் உலவிய ஒற்றை காட்டு யானை விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: கோவைப்புதூா் அருகே உள்ள வனப் பகுதி எல்லைகளில் காட்டு யானைகள் கூட்டமாக வருவது வழக்கம். இம்முறை அங்கு வந்த யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்துவிட்டது. இந்த யானை பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. காட்டு யானை ஊருக்குள் மீண்டும் வராமல் தடுக்க தொடா் கண்காணிப்புப் பணியில் வன ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com