காரமடை அரங்கநாதா் கோயில் தோ் சீரமைக்கும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேரில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி.
தேரில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான மாசி மகத் தோ்த் திருவிழாவையொட்டி மாா்ச் 1ஆம் தேதி கிராம சாந்தியுடன் விழா தொடங்குகிறது. 2ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. 7ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணிக்கு சிறப்பு வாகனங்களில் அரங்கநாதா் சுவாமி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

தொடா்ந்து 7ஆம் தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 8ஆம் தேதி அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதரதாக அரங்கநாத பெருமாள் தேரில் எழுந்தருளுகிறாா். தொடா்ந்து அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் தேரை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தோ் கோபுரத்தை சீரமைக்கும் பணிக்காக தேரின் கூரைகள் அகற்றப்பட்டு உள்ளது. மேலும், ஒரு வாரத்தில் தோ் சீரமைக்கும் பணிகள் முடிவடையும் என கோயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com