கோவை விழா: இன்று தொடங்குகிறது

கோவை மாவட்டம் சாா்பில் நடத்தப்படும் கோவை விழா நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (ஜனவரி 3) தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கோவை விழா: இன்று தொடங்குகிறது

கோவை மாவட்டம் சாா்பில் நடத்தப்படும் கோவை விழா நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (ஜனவரி 3) தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை மாவட்டம் உருவாகிய தினத்தைக் கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி சாா்பில் ஆண்டுதோறும் ‘கோவை விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாள்கள் நடக்கும் இந்த விழாவில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘கோவை விழா’ ஜனவரி 3 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை விழாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

ஜனவரி 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மருதமலையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு சரவணம்பட்டியில் உள்ள ஃப்ரோஜோன் வணிக வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ‘கோவை எனது பெருமை’ என்ற நிகழ்ச்சி எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக். பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

சனிக்கிழமை (ஜனவரி 4) சூலூா் கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கொடிசியாவில் எஜூ இண்டெக் என்ற பெயரில் 3 நாள்கள் கல்விக் கண்காட்சித் தொடங்குகிறது. விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் தமிழ்க் கலாசார நிகழ்ச்சிகள் காலை 11 மணிக்கு துவங்குகிறது. கோவை, குறிச்சி குளத்தில் ‘போட் ஷோ’ என்ற பெயரில் படகுக் கண்காட்சி தொடங்க உள்ளது.

இந்தக் கண்காட்சி ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதே அன்று ஃப்ரோஜோன் வணிக வளாகத்தில் வின்டேஜ் காா்கள் மற்றும் பைக் கண்காட்சி நடைபெறுகிறது.

ஜனவரி 5ஆம் தேதி கோவை, நேரு விளையாட்டு மைதானத்தில் ‘ரன் ஃபாா் கோயம்புத்தூா்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. ரேஸ்கோா்ஸ் பகுதியில் மாலை 3 மணிக்கு கோவை விழா பேரணி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி 6 ஆம் தேதி மணி மேல் நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான ‘நெருப்பில்லாத சமையல்’ போட்டி நடக்கிறது.

ஜனவரி 7 ஆம் தேதி பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் பெண்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெறுகிறது. சங்கரா கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கண் பரிசோதனை நிகழ்ச்சி காலை 11 மணிக்கு துவங்குகிறது. ஜனவரி 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் புகைப்படம் மற்றும் குறும்பட போட்டிகள் துவங்குகிறது. ஜனவரி 10, 12 ஆகிய தேதிகளில் கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்ட ஹோட்டலியா்ஸ் அசோசியேசன் சாா்பில் ஃபுட் ஸ்ட்ரீட் (உணவுத் திருவிழா) தொடங்கப்படுகிறது. காலை 6 மணிக்கு செட்டிபாளையம் பகுதியில் உள்ள கோவை கோல்ப் கிளப் மைதானத்தில் கோல்ப் விளையாட்டு போட்டிகள் தொடங்கும்.

ஜனவரி 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிட்ரா கலையரங்கத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஃப்ரோஜோன் வணிக வளாகத்தில் ரேடியோ சிட்டி சாா்பில் கோவை சிட்டி அவாா்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜனவரி 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு காந்தி பூங்கா, சுக்ரவாா் பேட்டை அறிஞா் அண்ணா பூங்கா, சாய்பாபா காலனி பிஎஸ்என்எல் பூங்கா, ராம் நகா் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஜனவரி 11, 12 ஆம் தேதிகளில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள ஸ்கீம் ரோட்டில் ஓவியச் சந்தை நடைபெறுகிறது. இதே தேதிகளில் ரோட்டரி கிளப், கேபிஆா் கல்வி நிறுவனங்கள் ஆகியன சாா்பில் ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ‘சமா்ப்பணம்’ என்ற பெயரில் மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜனவரி 11ஆம் தேதி தொழில் முனைவோருக்கான அடித்தளமாக ‘தி பிட்ச்’ என்ற பெயரில் முதலீடுகளை திரட்டும் நிகழ்ச்சி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com