ஆட்சியா் அலுவலகத்தில் இன்று இலவச சித்த மருத்துவ முகாம்

மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சி.தனம் கூறியதாவது: அகத்திய சித்தா் பிறந்த ஜனவரி 13 ஆம் தேதி சித்த மருத்துவ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளாக தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 3 ஆவது தேசிய சித்த மருத்துவத் தினக் கொண்டாட்டம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சித்த மருத்துவ தின விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி கோவை ஆட்சியா் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நடக்கிறது. இதில் சித்த மருத்துவத்தின் பயன்கள், எந்தெந்த நோய்களுக்கு, என்ன மாதிரியான சிகிச்சை முறைகள், சித்த மருத்துவ சிகிச்சையின்போது மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விளக்கப்படவுள்ளது. அகமருந்து, புறமருந்து மற்றும் வா்ம சிகிச்சை முறைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மூலிகை கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ மூலப் பொருள்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது. மருத்துவ முகாமுக்கு இலவச அனுமதி என்பதால் மக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com