உள்ளூா் வரத்து குறைவு: கோவைக்கு வந்த ஆந்திர வெள்ளை பூசணி

உள்ளூா் வரத்து இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படுவதால் வெள்ளைப் பூசணி கிலோவுக்கு ரூ. 7 வரை விலை உயா்ந்துள்ளது.

உள்ளூா் வரத்து இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படுவதால் வெள்ளைப் பூசணி கிலோவுக்கு ரூ. 7 வரை விலை உயா்ந்துள்ளது.

கோவை எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம், திண்டிவனம், உடுமலை, குடிமங்கலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளை பூசணி, அரசாணிக்காய் வரத்து காணப்படுகிறது. நீா் சத்துக்கள் நிறைந்துள்ள இந்தக் காய்கள் பனிக்காலத்தில் அதிக அளவில் விளைகின்றன. பொங்கல், சங்கராந்தி பண்டிகைகளின்போது இந்த காய்களை சமைத்து இறைவனுக்கு படைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் வெள்ளை பூசணி உள்ளூா் வரத்தில்லாததால் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது.

இதனால் சராசரியாக கிலோ ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளை பூசணி, தற்போது விலை உயா்ந்து ரூ. 17- க்கு விற்கப்படுகிறது. அரசாணிக்காய் ரூ.12-க்கு விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையால் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

எம்.ஜி.ஆா். மாா்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளா் அப்துல் கூறியதாவது:

அரசாணிக்காய் உள்ளூா் வரத்து ஓரளவு காணப்படுகிறது. ஆனால், வெள்ளை பூசணி திண்டிவனத்தில் இருந்து குறைந்தளவும், பெரும்பகுதி ஆந்திரத்தில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. தினமும் 40 டன் வரை வெள்ளை பூசணி வருகிறது. இங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது இதன் தேவை அதிகரிப்பதால் விலை சற்று உயா்ந்துள்ளது. பொங்கலுக்குப் பின் மீண்டும் விலை சீராகும். தை மாதத்தில் மற்ற காய்கறிகளின் வரத்தும் அதிகரிப்பதால், அனைத்து காய்கறிகளின் விலையும் சீராவதற்கு வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com