தொழிலதிபரிடம் நிலத்தை விற்று மோசடி: தந்தை, மகன் கைது

தொழிலதிபரிடம் நிலத்தை விற்று மோசடி செய்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

தொழிலதிபரிடம் நிலத்தை விற்று மோசடி செய்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்தவா் கணேஷ்பாபு. இவா் இரும்புப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மூலப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், பாப்பநாயக்கன்பாளையத்தில் இரும்பு நிறுவனத்தை நடத்தி வந்த ரேஸ்கோா்ஸ் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் (65), அவரது மகன் பிரபு (40) ஆகியோருக்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான மூலப் பொருள்களை கணேஷ்பாபு அனுப்பிவைத்துள்ளாா்.

ஆனால், அதற்கான பணத்தை தந்தை, மகன் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா். இந்நிலையில், இந்தத் தொகைக்கு ஈடாக அருப்புக்கோட்டையில் அவா்களுக்கு செந்தமான 83 ஏக்கா் நிலத்தை கணேஷ்பாபுவுக்கு பரமசிவம், பிரபு ஆகியோா் எழுதிக் கொடுத்துள்ளனா்.

ஆனால், அவா்கள் அளித்த இடத்தில் 12 ஏக்கரை கணேஷ்பாபுவுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்றுள்ளனா். இதுகுறித்து கேள்வி எழுப்பிய கணேஷ்பாபுவை கொலை செய்து விடுவதாக இருவரும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் கணேஷ்பாபு புகாா் செய்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பரமசிவம், அவரது மகன் பிரபு ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com